SHELTER IN CHRIST

March 27, 2014

Filed under: Messages — shelterinchrist @ 2:16 AM

கோலியாத்தை வீழ்த்துவது என்பது அதை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பெரிதாக தோன்றினாலும், தாவீதுக்கு ஒரு அற்ப காரியமாகவே இருந்தது. இஸ்ரவேலின் இராணுவங்களின் தேவனின் கிருபையால், கோலியாத்தை ஒரு சில நிமிடங்களில் அவன் வீழ்த்தி இருக்க கூடும். 

தாவீதின் மிகப்பெரிய சோதனை கோலியாத்தை எதிர் கொண்டதுதான் என்று சொல்வதை விட, தாவீது தன் வாழ்க்கையில் அனுதினமும் எதிர்கொண்ட பிரச்சனைகளே அவன் வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனைகளாக அமைந்தன. சவுலினிமித்தமும், பத்சேபாளினிமித்தமும், தன் குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்வில் அவன் அனுதினமும் சந்தித்த பிரச்சனைகளே அவனது வாழ்வின் பெரும் சோதனைகளாக அமைந்தன. 

நமது வாழ்விலும் கூட அனுதினமும் நாம் சந்திக்கிற சோதனைகள் அநேகமாக இருக்கலாம். அவைகளை கண்டு நாம் மனம் மடிந்து போவோமானால் நம் பெலன் குறுகி   விடும். ஆபத்து காலத்தில் சோர்ந்து போகாதிருப்பது முக்கியம். 

நாம் எதிர் பார்க்காத நேரங்களில் நாம் எதிர் கொள்ளும் சோதனைகள் பெரும் வேதனையாக அமையலாம். அப்படிதான் சுரமண்டலம் வாசித்து கொண்டிருந்த தாவீது எதிர்கொண்ட சவுலின் ஈட்டியும் இருந்திருக்கும்; தன் சகோதரர்களை சந்திக்க சென்ற போது அவர்களால் குழியில் தள்ளப்பட்ட யோசேப்புக்கும் இருந்திருக்கும். 

கர்த்தர் தமது பிள்ளைகளை காக்கிறவர்; அவர்களுக்கு சகலத்தையும் நன்மையாக முடியப்பண்ணுபவர். கர்த்தரின் ஆசீர்வாதங்களுக்காக பொறுமையுடன் காத்திருப்பது நல்லது. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்!! கர்த்தர் நம்மை ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரை அவரின் பலத்த கரங்களுக்குள் அடங்கி இருப்போமாக. 

சூழ்நிலைகள், பிரச்சனைகள் எத்தகையதாக இருந்தாலும், கர்த்தர் நம்மோடிருக்கிறவர் அவர் நம்மை நடத்தி செல்வார் என்பதை மறவாதிருப்போமாக!! நமது வாழ்க்கை எத்தகைய மோசமான நிலைமைக்கு சென்றாலும் அவர் கரம் நம்மை நடத்தும் என்பதை மறந்து விட வேண்டாம். நமது வேதனை அவர் கண்களுக்கு மறைவாயிருக்கவில்லை. அவர் நம்மை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார், சரியான நேரத்தில் நமக்கு பதில் செய்வார், அது வரையிலும் நாம் அவரை தூஷிக்காமல், பாவம் செய்யாமல் அவரை அண்டிக்கொண்டிருப்பது அவசியம். 

கர்த்தர் அவனவனுடைய கிரியைகளுக்கு தக்கதான பலனை அளிப்பவர். ஒரு வேளை நமது கஷ்டமான சூழ்நிலைகளுக்கு நமது கிரியைகளே காரணமாக இருக்கும் என்றால், தேவனுடைய சமுகத்திலே உபவாசித்து அமர்ந்து கர்த்தரோடு உடன்படிக்கை செய்து அவரிடம் திரும்புவோம், அவர் நம்மை திரும்ப சீர் படுத்துவார். கர்த்தரின் வசனங்களை பிடித்துக்கொண்டு ஜெபிப்போமாக. அவர் வாக்குறுதிகள் உண்மையானவைகள். தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும் நாம் கற்றுக்கொள்வோம். பரலோகத்திலே நமது பலன் மிகுதியாயிருக்கும்படி வாழ கற்றுக்கொள்வோமாக!!  

 Image

1. நடத்துவார் ஆ! இன்பெண்ணம்!
    மா ஆறுதல் சாரும் வண்ணம்,
    நான் எவ்விடத்திருக்கினும்,
    தேவனின் கையே நடத்தும்

    பல்லவி

    நடத்துவார்! நடத்துவார்!
    தம் கையாலே நடத்துவார்!
    அவரை நேராய் பின்செல்வேன்;
    தம் கையாலே நடத்துவார்!

2. ஓர் வேளை இருள் பாதையில்,
    ஓர் வேளை ஏதேன் பூங்காவில்,
    அலை கடல் அமைவிலும்
    அவர் நேச கை நடத்தும்! – நடத்துவார்

3. கர்த்தா! நான் உம் கை பிடிப்பேன்,
    திருப்தியால் குறை பேசேன்!
    எந்த நிலையும் பூரணம்;
    நீரே எனக்குத் தாரணம்! – நடத்துவார்

4. இங்கென் வேலை முடிந்தபின்,
    துங்கனால் வெற்றி பெற்ற பின்
    பங்கம் சாவிலு மஞ்சிடேன்,
    பொங்கு யோர்தான் தாண்டச் செய்வார்! – நடத்துவார்
   –   Joseph Henry Gilmore

[From The Salvation Army Tamil song book: பாடல் 380: நடத்துவார் ஆ! இன்பெண்ணம்! He leadeth me! – 725  (Tune 21 Of English Song Book)]

 

Advertisements

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: